போர்குற்ற விசாரணை:மோசமான சூழலில் வாழ்வதாகக் கூறுகிறார் கிளர்ச்சிக் குழு தலைவர்

படத்தின் காப்புரிமை AFP
Image caption பாஸ்கோ ந்டாங்காடா

காங்கோவில் முன்னர் செயல்பட்ட கிளர்ச்சிக்குழுவின் தலைவரான பாஸ்கோ ந்டாங்காடா தான் மோசமான சூழலில் வாழ்வதாகக் கூறுகிறார்.

போர் குற்றங்கள் புரிந்ததான குற்றச்சாட்டில் அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.

ஆனால் தான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சூழலை பார்க்கும்போது, மரணத்தை எதிர்கொள்ளத் தான் தயாராக இருப்பதாகக் கூறும் அவர் கடந்த வாரம் முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரை சிறையில் சந்திக்க வருபவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக தனது போராட்டதை அவர் தொடங்கியுளார்.

எனினும் தி ஹேகிலுள்ள பிபிசியின் செய்தியாளர் ஒருவர் அவர் சிறையில் ஒப்பீட்டு அளவில் சுகமாகவே வாழ்கிறார் எனக் கூறுகிறார்.

தன்மீதான சட்ட நடவடிக்கைகளை திசைதிருப்பி அதில் பித்தலாட்டம் செய்யும் நோக்கிலேயே இப்படியான வழிமுறைகளில் அவர் ஈடுபடுகிறார் என அவர் மீதான குற்றச்சாட்டை வைத்துள்ளவர்கள் கூறுகின்றனர்.