நைஜீரியா: எரிபொருள் திருட்டு விவகாரத்தில் நாடாளுமன்ற கீழவை விசாரணை

நைஜீரியாவில் உள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் சுமார் 17 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஏற்றுமதி செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் எரிபொருளை திருடினார்களா என்பதை தீர்மானிக்க நாடாளுமன்றத்தின் கீழவை விசாரணை ஒன்றை நடத்த உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

நைஜீரிய நாட்டின் ஏற்றுமதி செய்யப்பட்ட விபரங்களுடன் எண்ணெய் அனுப்பப்பட்டிருக்க வேண்டிய நாடுகளின் இறக்குமதி புள்ளிவிவரங்களை ஒப்பிட்டு பார்க்கையில் பற்றாக்குறை கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னாள் அதிபர் குட்லக் ஜோனதன் நிர்வாகத்தின் போது இந்த திருட்டு நடந்ததாக கூறப்படுகிறது.

அவரை தொடர்ந்து, அதிபராக பதவியேற்ற முகமது புஹாரி, ஊழலை எதிர்த்துப் போரிடுவதற்கு முன்னுரிமை தந்திருந்தார்.

ஆனால், அரசியல் எதிராளிகளை குறிவைத்து நடவடிக்கை எடுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்