சீன பிரதமர் ராவுல் காஸ்ட்ரோவுடன் சந்திப்பு

சீன பிரதமர் லி கச்சியாங், க்யூபாவிற்கான தனது இரண்டு நாள் அதிகாரபூர்வ விஜயத்தின் தொடக்கமாக, ஹவானாவில் க்யூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவை சந்தித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ராவுல் காஸ்ட்ரோ மற்றும் லி கச்சியாங்(கோப்புப் படம்)

ஐம்பது வருடங்களுக்கு முன் இருநாடுகளும் ராஜ தந்திர உறவுகளை நிறுவிய பிறகு, க்யூபாவிற்கு பயணம் செய்யும் முதல் சீன பிரதமர் இவரே ஆவார்.

இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையிலும், பல பொருளாதார ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக க்யூபா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெனின்சுவேலாவுக்கு அடுத்து, சீனா க்யூபாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாகும்.

கடந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இரு நாட்டு வர்த்தக மதிப்பு ஒன்றரை பில்லியன் டாலர்களுக்கும் மேல் என்று அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

தொடர்புடைய தலைப்புகள்