டிம்பக்டூ நினைவிடங்கள் அழிப்பு: இஸ்லாமியவாதிக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை

படத்தின் காப்புரிமை Reuters
Image caption டிம்பக்டூவில் அழிக்கப்பட்ட ஒரு வழிபாட்டுத் தலம்.

ஆஃப்ரிக்க நாடான மாலியைச் சேர்ந்த இஸ்லாமியவாதி ஒருவருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

மாலியிலுள்ள புராதன நகரான டிம்பக்டூவில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல வழிபாட்டுத் தலங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அழிக்கப்பட்ட வழக்கில் தன்மீதான குற்றச்சாட்டை அஹ்மட் அல்-ஃபகி அல்-மஹ்டி ஒப்புக்கொண்டார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption குற்றத்தை ஒப்புக்கொண்ட அல்-மஹ்டி

அல்-கயீதாவுடன் தொடர்புடையக் குழுவொன்று மாலியின் வடபகுதியை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பிறகு அங்கிருந்த ஏராளமான பழங்கால நினைவிடங்கள் அழிக்கப்பட்டன.

காலாச்சாரச் சின்னங்கள் சீரழிக்கப்பட்டது தொடர்பில் அந்நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் முதல் நபர் இவரே.

தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்த அல்-மஹ்டி, தான் செய்த குற்றங்களை அடுத்தவர்கள் பின்பற்றக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.