சொந்த மக்கள் மீது ரசாயன ஆயுதங்கள்: சூடான் அரசு மீது அம்னெஸ்டி குற்றச்சாட்டு

சூடானில் உள்ள டாஃபூரில் சொந்த மக்களுக்கு எதிராகவே அந்நாட்டு அரசு ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டெர்நேஷனல் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சூடான் வரைப்படம்

கடந்த ஜனவரி மாதம் டாஃபூரில் வீசப்பட்ட வெடிகுண்டுகள் வெளியிட்ட ரசாயனங்கள் காரணமாக 200க்கும் மேற்பட்ட மக்கள், டஜன்கணக்கான குழந்தைகள் உள்பட பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆயுதங்கள் வீசப்பட்ட உடன் இதிலிருந்து வெளியான இயற்கைக்கு மாறான மற்றும் அழுகல் துர்நாற்றமானது காற்றில் கலந்தது என இந்த தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்தவர்கள் அம்னெஸ்டியிடம் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

நச்சு காற்றை சுவாசித்தவர்கள் ரத்த வாத்தி எடுத்துள்ளனர். மேலும், சருமத்தில் காயம் மற்றும் கொப்புளங்களால் அவதிப்பட்டுள்ளனர்.

கடந்த 13 வருடங்களாக டாஃபூரில் உள்ள போராளி குழுக்களை எதிர்த்து சூடான் அரசாங்கம் சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த மோதலில், 3,00,000 அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், மூன்று மில்லியன் பேர் பாதுகாப்பான இடங்களைத் தேடி இடம் பெயந்துள்ளனர்.

அம்னெஸ்டியின் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு சூடான் அரசு இதுவரை எவ்விதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்