துல்லிய தாக்குதல்: இந்திய ராணுவம் சொன்னது என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

துல்லிய தாக்குதல்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவம் சொன்னது என்ன?

பாகிஸ்தானுடனான கட்டுப்பாட்டு கோடு அருகே, காஷ்மீர் தீவிரவாதிகளின் நிலைகள் மீது துல்லிய தாக்குதலை நடத்தியதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இந்தியாவின் கூற்றுகளை பாகிஸ்தான் மறுத்துள்ளது. பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவளிக்க முயல்வோருக்கும் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது. இந்தியா மேற்கொண்ட அத்துமீறலிலில் இரண்டு பாகிஸ்தான் படையினர் உயிரிழந்துவிட்டதாகவும், அதே நேரத்தில் பாகிஸ்தான் அமைதியை விரும்புவதால் அதை பலவீனமாகக் கருதக்கூடாது என்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.