கொலம்பியா: அரசின் தலைமைப் பேச்சாளர் பதவி விலக முன்வந்துள்ளார்

கொலம்பியாவில் அரசுக்கும் ஃபார்க் கிளர்ச்சிக் குழுவுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி உடன்படிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து அரசின் தலைமை பேச்சுவார்த்தையாளர் உம்பர்த்தோ டெ லா காயே பதவி விலக முன்வந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கருத்தறியும் வாக்கெடுப்பில் உடன்பாடு நிராகரிக்கப்பட்டது

இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட அமைதி உடன்படிக்கை, கடந்த ஞாயிறன்று நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளாக க்யூபாவில் நடைபெற்ற இந்தப் பேச்சுக்களை தொடருவதற்கு அவர் அங்கு பயணமாகவிருந்தார்.

பேச்சுவார்த்தைகளில் ஏதாவது தவறுகள் இருக்குமாயின் அதற்கான முழுப்பொறுப்பையும் தான் ஏற்பதாக தெ லா காயா தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் பதவி விலக முன்வந்துள்ளதை அதிபர் ஹுவான் மானுவேல் சாண்டோஸ் ஏற்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அரசுடன் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டை தான் மறுபரிசீலனை செய்யத் தயாராகவுள்ளதாக ஃபார்க் அமைப்பின் தலைவர் என அறியப்படும் டிமொசென்கோ க்யூப வானொலி ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.