மொசூல் நகரில் 6 லட்சம் குழந்தைகளின் நிலை: தொண்டு நிறுவனம் கவலை

இராக்கின் வட நகரமான மொசூல் மீது அரசு படையினர் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் நடத்தும் திட்டமிட்ட தாக்குதலால் சுமார் 6 லட்சம் குழந்தைகளின் உயிர்கள் ஆபத்துக்குள்ளாவதாக 'சேவ் தி சில்ட்ரன்' என்ற குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அந்த தொண்டு நிறுவனமானது, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள ஐ.எஸ் அமைப்பினர் உட்பட அனைத்து தரப்பினரையும் , அங்கு நடைபெறும் மோதல்களிலிருந்து குடும்பங்கள் பத்திரமாக வெளியேற பாதுகாப்பான வழிகள் இருக்கின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரியிருக்கிறது .

படத்தின் காப்புரிமை Google

மொசூல் நகரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அதில், பாதி பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்