மேத்யூ சூறாவளியின் தாக்கம்: ஹெய்டியில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலி

கரீபியன் தீவான ஹெட்டியில் மேத்யூ சூறாவளியின் தாக்குதலால் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஹெய்டியில் மேத்யூ சுராவளியால் கடும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன

இதை ஹெய்டியின் உள்துறை அமைச்சர் செய்தி ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாட்டின் தென்பகுதியில் இருக்கும் ரோஷ்-அ-பெடூ நகரில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பல இடங்களில் பயிர்கள் முற்றாக அழிந்துள்ளன

மிகவும் தொலைதூரப் பகுதிகள் மற்றும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டப் பகுதிகளில் இருந்து கிடைக்கும் படங்கள் அங்கு பேரழிவுகள் ஏற்பட்டுள்ளதை காட்டுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெய்டியின் தென் கடலோரப் பகுதி முழுவதும் பேரழிவை சந்தித்துள்ளன என்று உள்துறை அமைச்சர் கூறுகிறார்.

அதிலும் குறிப்பாக ஒரு நகர் ஒட்டுமொத்தமாக அழிந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பல சிறுநகரங்கள் முற்றாக அழிந்துள்ளன என ஹெய்டி அரசு கூறுகிறது

ஏராளமான வீடுகள் அழிந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

இதனிடையே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனும் அச்சங்களும் எழுந்துள்ளன.

மிகவும் பலம் வாய்ந்த இச்சூசூறாவளி இப்போது அமெரிக்காவும் ஃபுளோரிடா நோக்கி நகர்கிறது.