முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி குற்றச்சாட்டில் மேலும் இரண்டு பேர் கைது

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து வதந்தி பரப்பிய குற்றச்சாட்டில் மேலும் இரண்டு பேரை தமிழக காவல்துறை கைதுசெய்துள்ளது.

Image caption சமூக ஊடகங்களில் ஜெயலலிதா உடல் நிலை குறித்த வதந்தி பரப்பிய குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது

மத்திய குற்றப் பிரிவு காவல்துறை இந்த இருவரையும் கைதுசெய்துள்ளது. ஃபேஸ்புக்கில் முதல்வரின் உடல் நிலை குறித்து வதந்திகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்தைச் சேர்ந்த மணிச்செல்வம், சென்னை பம்மலில் வசித்துவந்த பாலசுந்தரம் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முதல்வர் குறித்த வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பியது தொடர்பாக இதுவரை 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.