சூப்பர்பக்சுக்கு எதிராக ஆஸ்திரேலிய விலங்கின் பால் பயன்படுத்தப்படலாம்: ஆராய்ச்சியாளர்கள்

ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாத கிருமிகளுக்கு ( சூப்பர் பக்ஸ்) எதிரான உலகளாவிய முயற்சிகளில், டாஸ்மேனிய டெவில் ( Tasmanian Devil) என்ற பாலூட்டி விலங்கின் பால் பயன்படுத்தப்படலாம் என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை MENNA JONES

இந்தப் பாலில் உள்ள ரசாயனக் கூட்டுப் பொருட்கள் மிக்க் கொடிய பாக்டீரியாவைக் கூட கொல்லமுடியும்.

சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அந்தக் கூட்டுப் பொருட்களை செயற்கையாகப் பெருக்க தற்போது முயன்று வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த விலங்கு ஆஸ்திரேலியத் தீவான டாஸ்மேனியாவின் காடுகளில் மட்டும்தான் காணப்படுகிறது.

ஆனால் தனது குட்டியை தனது வயிற்றுப்பையில் சுமக்கும் மற்ற விலங்குகளின் பாலிலும் முக்கிய கூட்டுப் பொருட்கள் இருக்கின்றன.