ஜூலியன் அசாஞ்சுக்கு இணையத் தொடர்பை துண்டித்தது எக்வடார் அரசு

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்களிப்பைப் பாதிக்கும் வகையில், பெரிய அளவிலான ரகசிய தகவல்களை, விக்கிலீக்ஸ் இணையதளம், வெளியிட்டதாகக் கூறி, எக்வடார் அரசு, விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு இணையத் தொடர்பை துண்டித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

எக்வடார் அரசு தஞ்சம் அளித்த பிறகு, நான்கு ஆண்டுகளுக்கு மேலாக, எக்வடாரின் லண்டன் தூதரகத்தில் அசாஞ் தங்கியுள்ளார்.

சுவீடனில், பாலியல் தாக்குதல் தொடர்பாக அவர் தேடப்படும் நபராக உள்ளார். பிரிட்டன் அவரை ஒப்படைக்க விரும்புகிறது.

படத்தின் காப்புரிமை TWITTER
Image caption எக்வடார் அரசு ஜூலியன் அசாஞ்சுக்கு இணையத் தொடர்பை துண்டித்துள்ளது என ட்விட்டரில் பதிவிட்டிருந்தது விக்கிலீக்ஸ் நிறுவனம்

எக்வடார் அரசு அமெரிக்க தேர்தல் முறையில் தான் தலையிட வேண்டாம் என்று விரும்புவதாகக் கூறியுள்ளது. மேலும், அமெரிக்க அரசு கொடுத்த அழுத்தத்தின் பேரில் தான் அசாஞ்சுக்கு இணையத் தொடர்பை இடைநிறுத்தியுள்ளது என்ற கூற்றை மறுத்துள்ளது.