எக்வடோர்: ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சரை தடுப்புக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

எக்வடோரில் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான முன்னாள் எண்ணெய் அமைச்சர் கார்லோஸ் பரேஜாவை தடுப்புக்காவலில் வைக்கும்படி அந்நாட்டு நீதிபதி ஒருவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முன்னாள் எண்ணெய் அமைச்சர் கார்லோஸ் பரேஜா

எக்வடோர் அரசின் எண்ணெய் நிறுவனமான பெட்ரோஎக்வடோரில் சில ஒப்பந்தங்களை நிறுவனங்கள் பெறுவதற்கு கார்லோ பரேஜா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளானார்.

எண்ணெய் நிறுவனத்தை பாதிக்கும் வகையில் நடைபெற்ற சுமார் 12 மில்லியன் டாலர்கள் ஊழல் மோசடி விசாரணையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எக்வடோர் அதிபர் ரஃபேல் கொரியாவின் நெருங்கிய கூட்டாளியான கார்லோஸ் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்