பாலியல் வல்லுறவு புகார் குறித்த கேள்விகளை இன்று எதிர்கொள்ள உள்ளார் ஜூலியன் அசாஞ்ஜ்

கடந்த 2010 ஆம் ஆண்டு ஸ்வீடிஷ் பெண் ஒருவர் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஜ் மீது கொடுத்த பாலியல் வல்லுறவு புகார் குறித்து இன்று வழக்கறிஞர்கள் அவரிடம் கேள்விகளை கேட்க உள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஜ்

இந்த விசாரணை லண்டனில் உள்ள எக்வடோர் தூதரகத்தில் நடைபெற உள்ளது.

2012 லிருந்து ஜூலியன் அசாஞ்ஜ் அங்கு தஞ்சம் புகுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக விக்கிலீக்ஸ் நிறுவனரிடம் கேள்வி எழுப்பப்பட உள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார். மேலும், இது பரஸ்பர ஒப்புதலுடன் நடந்த உறவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு சிக்கலான சட்டப்பூர்வ ஒப்பந்தத்தின் கீழ், ஸ்வீடிஷ் அரசு வழக்கறிஞர்கள் ஜூலியன் அசாஞ்ஜிடம் கேட்க வேண்டிய கேள்விகளைத் தொகுத்து சமர்ப்பித்துள்ளனர். இந்த கேள்விகளை ஜூலியன் அசாஞ்ஜிடம் எக்வடோர் அரசு வழக்கறிஞர் கேட்க உள்ளார்.

இந்த நடைமுறையின் போது, அங்கு நடைபெறும் உரையாடலை கேட்பதற்கு ஒரு மூத்த ஸ்வீடிஷ் அரச வழக்கறிஞரும், போலிஸ் விசாரணை அதிகாரி ஒருவரும் எக்வடோர் தூதரகத்தில் இருப்பார்கள்.

தொடர்புடைய தலைப்புகள்