சர்வதேச அளவில் மனித உறுப்புக்கள் கடத்தலில் ஈடுபட்ட குழு எகிப்தில் கைது

மனித உறுப்புக்களை கடத்திய சர்வதேச ரீதியாக ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு பெரிய குழுவைக் கண்டுபிடித்திருப்பதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

மருத்துவர்கள், செவிலியலர்கள், இடைத்தர்களாக செயல்படும் வர்த்தகர்கள் உள்பட 25 பேர் அதிகாலையில் நடந்த திடீர் சோதனைகளில் கைது செய்யப்பட்டனர்.

எகிப்தியர்கள் மற்றும் அரேபியர்களக் கொண்டு அந்தக் குழு உருவாக்கப்பட்டிருப்பதாக்க் கூறப்படுகிறது.

ஏழைகளைக் குறிவைத்து, சிறுநீரகம் போன்ற உறுப்புக்களை குறைந்த விலைக்குப் பெற்று, அதை மிக அதிக விலைக்கு விற்பது அக்குழுவின் நடவடிக்கையாக உள்ளது. அத்தகைய வர்த்தகம், எகிப்தில் 6 ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்டது. எனினும் அது தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்