ரஷ்யாவுடன் சமரசம் செய்து கொண்டேனா? ஆவேசத்துடன் டிரம்ப் மறுப்பு

தன்னை சங்கடத்துக்குள்ளாக்கும் முக்கிய தகவல்களை ரஷ்யா வைத்துள்ளதாக கூறப்படுவதற்கு எதிராக கடுங்கோபத்துடன் பதிலளித்துள்ள அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தன்னை பயன்படுத்திக் கொள்ள ரஷ்யா எப்போதும் முயன்றதில்லை என்று கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தாங்கள் சமரசம் செய்து கொண்டதாக கூறப்படுவதை மறுத்துள்ள டிரம்ப் மற்றும் புதின் அலுவலகங்கள்

இது போன்ற தவறான தகவல்களை பொது மக்களிடையே கசிய அனுமதித்த உளவு முகமைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள டிரம்ப், , '' நாம் என்ன நாஜி ஜெர்மனியிலா வாழ்ந்து வருகிறோம்? என்று கேள்வியெழுப்பினார்.

டிரம்ப்பின் தேர்தல் பிரச்சாரக் குழு ரஷ்யாவுடன் தொடர்பில் இருந்தது எனவும், விலைமாதர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் இந்தக் கூற்றுகள் கூறுகின்றன.

இத்தகைய கூற்றுகளுக்கு எதிராக ரஷ்யாவும் ஆவேசமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண ; பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்