தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தி.மு.க - காங்., வெளிநடப்பு

இன்று காலை ஆளுநர் உரையுடன் துவங்கிய சட்டமன்றத் கூட்டத் தொடரிலிருந்து தி.மு.க - காங்., வெளிநடப்பு செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை Tndipr

தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை கூட்டத்தொடர் தொடங்கியது.

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை ஆற்றினார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்க ஜெயலலிதா பெரும் முயற்சி எடுத்து சாதித்தார் என்றும், அனைத்து தளங்களிலும் தமிழ் மொழியை ஆட்சிமொழியாக்க தமிழக அரசு பாடுபடும் என்றும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கூட்டத்தொடரை புறக்கணித்து தி.மு.க மற்றும் காங்., கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்