அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் தென்கொரியா பயணம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் தென்கொரியா பயணம்

அமெரிக்காவின் புதிய பாதுகாப்புச் செயலர், ஜேம்ஸ் மாட்டிஸ் தென் கொரியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இருநாடுகளுக்கு இடையேயான உறவு எவ்வகையிலும் பலவீனப்படாது என்று தென் கொரியத் தலைவர்களுக்கு அவர் உறுதி அளித்துள்ளார்.

வட கொரியாவின் தாக்குதலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஜப்பானும், தென் கொரியாவும் அமெரிக்காவுக்கு போதிய அளவுக்கு பணம் செலுத்துவதில்லை என்று தேர்தல் காலத்தில் அவர் கூறியிருந்தது அந்நாடுகளில் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.