நீதிபதிகளை இலக்கு வைத்து பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தற்கொலை குண்டுதாரி என்று சந்தேகிக்கப்படும் நபர் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பெஷாவரில் நீதிபதிகள் வாகனத்தின் மீது தற்கொலைத் தாக்குதல்

இருசக்கர வாகனத்தில் வந்த தற்கொலை குண்டுதாரி நீதிபதிகள் பயணம் செய்த வாகனம் ஒன்றின் மீது மோதி தாக்குதலை நடத்தியுள்ளார்.

இதில் சில நீதிபதிகள் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் அண்மைக் காலமாக வேகமாக அதிகரித்து வரும் பயங்கரவாதக் தாக்குதல் பட்டியலில் இத்தாக்குதல் இப்போது சேர்ந்துள்ள்ளது.

முன்னதாக பழங்குடிகள் வசிக்கும் வடமேற்கு பிரதேசமான மொஹ்மாண்டில் அரச கட்டடம் ஒன்றை இலக்கு வைத்து இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் இன்று நடத்தியத் தாக்குதலில் ஐந்து பேர் பலியாயினர்.

இத்தாக்குதலின் பின்னணியில் தாமே இருந்ததாக பாகிஸ்தானிய தாலிபான்களின் ஒரு பிரிவான ஜமாத்-உர்-அஹ்ரார் கூறியுள்ளது.

கடந்த திங்கள்கிழமை லாகூரில் நடைபெற்ற தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட தமது அமைப்பே காரணம் எனவும் அது தெரிவித்துள்ளது.