ஆபாச ஆடியோவால் பதவியிழந்த அமைச்சர்

கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் குறித்த ஆபாச ஆடியோ ஒன்று வெளியான குற்றச்சாட்டில் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

படத்தின் காப்புரிமை A K SASEENDRAN FB
Image caption ஆபாச ஆடியோவால் பதவியிழந்த அமைச்சர் ஏ.கே.சசீந்திரன்

அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் பெண் ஒருவரிடம் ஆபாசமாக பேசுவது போன்ற ஆடியோ ஒன்று மலையாள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானதை அடுத்து அவர் தனது பதவியை இன்று ராஜிநாமா செய்தார்.

கோழிக்கோட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து தனது ராஜிநாமா செய்தியை அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து முதலமைச்சரை சந்தித்து பேசியுள்ளார் ஏ.கே.சசீந்திரன்.

மேலும், தான் ராஜிநாமா செய்ததால் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக அர்த்தமில்லை என்றும் ஓர் அரசியல்வாதியாக தான் கடமையை செய்ததாகவும் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கேரள முதலமைச்சர் பினராய் விஜயனின் 10 மாத ஆட்சியில் ராஜிநாமா செய்யும் இரண்டாவது அமைச்சர் இவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்