பாகிஸ்தானின் ரகசிய நாத்திகவாதிகள்!

படத்தின் காப்புரிமை Getty Images

பாகிஸ்தானில் நாத்திகவாதியாக இருப்பது உயிருக்கு அச்சுறுத்தலை விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால், ரகசியமான முறையில், இறை மறுப்பாளர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதற்காக ஒன்று கூடி வருகின்றனர்.

இதுகுறித்து, மொபீன் அஸார் வழங்கும் கட்டுரை.

நிந்தித்தலுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் ஒரு நாட்டில் அவர்கள் எவ்வாறு பிழைத்துக் கொள்கின்றனர்?

இஸ்லாமிய மத தீவிர பற்றாளரின் பெயரைக் கொண்ட ஒமர், தனது மூதாதையர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை மறுக்கிறார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த நாத்திகவாதிகளின் சந்திப்பு மையமாக விளங்கும் இணைய குழுவின் நிறுவன உறுப்பினர்களில் அவரும் ஒருவர்.

அங்கும் கூட அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உறுப்பினர்கள் போலி அடையாளங்களை அதில் பயன்படுத்துவர்.

"அதனால் அவர்களை ஆதரிக்கும் முன்பு மிகவும் கவனமாக நீங்கள் இருக்க வேண்டும்" என்கிறார் அவர்.

முகநூலில் (ஃபேஸ்புக்) உள்ள ஒமரின் சுயவிவர பக்கத்தை பார்த்து அதில் உள்ள அவரது குடும்பத்தின் படங்களை பிரிண்ட் எடுத்து வைத்துள்ளதை தெரிவிப்பதற்காக ஒருவர் ஒமரை சந்தித்துள்ளார்.

"உங்களால் பாதுகாப்பாக இருக்க முடியாது" என்று ஒமர் கூறுகிறார்.

பாகிஸ்தானில், நாத்திகவாதம் பற்றி ஆன்லைனில் பதவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படலாம்.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட கணினிக் குற்றத் தடுப்பு சட்டப்படி, நிந்திப்பதாகக் கருதப்படும் பதிவுகள், தனிப்பட்ட குழுவிலோ அல்லது ஆன்லைனிலோ செய்யப்படுவது சட்டவிரோதமாகும்.

நிந்தித்தலுக்கு உள்ளாவதாக ஏதாவதொரு கருத்து இருப்பதாக பொதுமக்கள் நம்பினால் அது பற்றி புகார் தெரிவிக்கலாம் என்று தேசிய நாளிதழ்களில் அரசு விளம்பரம் வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த சட்டம் தற்போதும் அமலில் உள்ளது. நிகழாண்டு ஜூனில் முதலாவது வழக்காக, முகநூல் பக்கத்தில் நிந்தித்தலுக்கு உள்ளாகும் கருத்துகளை வெளியிட்டதாக தைமூர் ரஜாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

ஒரு பாகிஸ்தான் நாத்திகவாதியின் கையேடு

நாத்திக சிந்தனைகள் மற்றும் பாகிஸ்தானிய அரசியல் பற்றிய கருத்துகளை வெளியிடுவதற்காக சமூக ஊடகத்தை பயன்படுத்தக் கூடிய ஆன்லைன் செயல்பாட்டாளர் "ஜாஹிர்."

"அன்புள்ள டயரி, தற்போதுவரை ஓராண்டாக நான்கு டுவிட்டர் கணக்குகளை நான் பராமரித்து வருகிறேன். நேற்றிரவு ஒரு கணக்கு முடக்கப்பட்டது.

எனது விவரங்கள் எவ்வளவு தெளிவற்றதாகவோ அல்லது நான் பயன்படுத்தும் படங்கள் பொதுவானவையாகவே இருப்பது பற்றி ஒன்றும் பிரச்னை இல்லை.

யாரோ ஒருவர் என்னை பார்ப்பது போலவே உள்ளது. ஒவ்வொரு முறை இது நடைபெறும்போது, இதை விட்டு விடலாமா என்று எனக்குத் தோன்றும். என்னை அமைதியாக்க அவர்கள் விரும்புன்றனர்".

இதன் விளைவாக, கடவுள் இருப்பது பற்றி கேள்வி பொதுப்படையாகக் கேள்வி எழுப்பும் தங்களின் திறனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக நாத்திகவாதிகள் கருதுகின்றனர்.

நாத்திகவாத வலைபதிவீட்டாளர்களுக்கு எதிராக அரசு போர் தொடுப்பதாக ஒமர் நம்புகிறார். "மத அடிப்படைவாதத்துக்கு எதிராக எனது நல்ல நண்பர் ஒருவர் எழுதுவார்."

"நாங்கள் ஒரு ஆன்லைன் குழுவை இணைந்து நடத்தி வந்தோம். அவர் மிகவும் கடுமையாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார் என்று எனக்கு தெரிய வந்தது. நீங்கள் ஒருமுறை கடத்தப்பட்டால், உங்கள் உடல் மட்டுமே வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இதை வேண்டுமென்றே அரசு செய்கிறது, எனவே நீங்கள் எல்லை மீறிச் சென்றால் இதுபோன்றவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்ற சமிக்ஞை மீதமுள்ளவர்களுக்கு உணர்த்தப்படகிறது.

இந்த ஆண்டில், நாத்திகத்துக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் குழுக்களில் பதிவிட்ட ஆறு செயல்பாட்டாளர்கள் கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதில் தன்னை அடையாளப்படுத்த விரும்பாத செயல்பாட்டாளர் ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், இஸ்லாத்துக்கு எதிரான விமர்சனங்கள் மட்டுமின்றி அரசுக்கு எதிரான விமர்சனங்களையும் முற்றாக இல்லாத நிலையைச் செய்ய வேண்டும் என பாகிஸ்தானின் உளவு அமைப்பு விரும்புகிறது என நம்புவதாகக் குறிப்பிட்டார்.

அவரது பார்வையில், நல்ல குடிமகன் என்பவர் நல்ல முஸ்லிம் ஆக இருக்க வேண்டும் என்ற கருத்தை அரசு உருவாக்க முயற்சிக்கிறது என்கிறார்.

"ஹம்சா" ஒரு வலைபதிவாளர் மற்றும் ஆன்லைன் நாத்திக குழுவின் நிறுவன உறுப்பினர்

"'டியர் டைரி, சில பேர் இதை கைது என்கின்றனர் ஆனால், இது ஒரு கடத்தல். நான் 28 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். அவர்கள் யார் என்று அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். ஆனால், அது ராணுவம்தான் என எனக்கு நன்றாக தெரியும். எட்டு நாள்களுக்கு துன்புறுத்தலும், 20 நாள்களுக்கு ஆற்றுப்படுத்துவதுமாக அந்த நாள்கள் இருக்கும். எனது உடல் முழுவதும் கறுப்பாக இருந்தது. எனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், அரசியல் மற்றும் மத வலைபதவுகளில் பங்கேற்ற மாட்டேன் என்றும் என்னிடம் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டனர். இது பற்றி ஊடகங்களிடம் பேசினால், எனது குடும்பத்தினர் குறி வைக்கப்படுவர்"

இந்த ஆண்டு, பாகிஸ்தான் அதன் 70-ஆவது வருட சுதந்திரத்தை கொண்டாட உள்ளது. 1956-ஆம் ஆண்டு முதல், இஸ்லாமிய குடியரசாக அந்நாடு இருக்கிறது. ஆனால், அதே மனப்பான்மையுடன், முன்பை விட மேலும் மோசமாக நாடு இருப்பதாக செயல்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.

அண்மைக்காலங்களில், பொதுவாழ்வில் இஸ்லாமிய நம்பிக்கை மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. சவூதி பாணி ஆடை அடையாளம் அதிக அளவில் கட்டாயப்படுத்தப்படுகிறது.

தொலைக்காட்சி பிரசாரகர்கள், சித்தாந்த கலாசாரத்தையும், பக்திமிக்க முஸ்லிம் ஆக இருப்பவர்தான் பாகிஸ்தானியர் என்பது போலவும் உருவகப்படுத்துகின்றனர்.

பாகிஸ்தானில் நாத்திகம் என்பது தொழில்நுட்பமாகப் பார்க்கையில் சட்டவிரோதம் கிடையாது, விசுவாச துரோகம்தான் மரண தண்டனைக்கு தகுதிபெறும் குற்றம் என்றவாறு இஸ்லாத்தின் சில விளக்கங்களில் காணப்படுகிறது. இதன் விளைவாக, பொது இடத்தில் பேசுவது, உயிருக்கு அச்சுறுத்தலாகலாம்.

பெரும்பாலான பாகிஸ்தானிய நாத்திகவாதிகள், ரகசியமாகவும், அழைப்புகளின்பேரில் மட்டுமே கூடுகின்றனர்.

லாகூரில் உள்ள நாத்திகவாதிகள் பாதுகாக்கப்பட்ட கட்டடங்கள் அல்லது தனி நபர் வீடுகளில் மாதந்தோறும் கூடுகின்றனர்.

அத்தகைய ஒரு பங்கேற்பு, "ரகசிய சமூகம் போல அது இருக்கும். பேசுவதற்கான குமிழி போல அந்த இடம் இருக்கும். ரிச்சர்ட் டாவ்கின்ஸ் அல்லது சாம் ஹாரிஸ் பற்றி எல்லாம் கிடையாது. எப்படி நிகழ்வுகள் செல்கிறது என்பது பற்றி மட்டுமே நாங்கள் பேசுவோம். உங்கள் தலை முடி கலைந்து, உங்களுக்கு உண்மையாக இருக்கும் வகையில் அந்த இடம் இருக்கும்" என்று விளக்குகிறது.

இதுபோன்ற சந்திப்புகளில் வசதியானவர்கள், ஆங்கிலம் பேசக் கூடிய நகரவாசி நாத்திகர்கள் முக்கியமாக இருப்பர்.

கடவுள் மறுப்பாளர்களுக்கு அவர்களின் உரிமையையும், பாதுகாப்பையும் பணம் அளிக்காது. ஆனால், நாத்திகவாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் ஏராளமானோர் பாகிஸ்தானின் கிராமங்களிலும் வசிக்கின்றனர்.

"சுஹைப்" அண்மையில் பஞ்சாபில் உள்ள பல்கலையில் பட்டப்படிப்பு முடித்தவர்

"அன்புள்ள டயரி, எனக்கு நெருக்கமான ஒரு பெண் பல்கலைக்கழகத்தில் இந்த பிற்பகலில் என்னிடம் வந்து: உன்னுடன் விவாதிக்க விரும்புகிறேன். நீங்கள் ஒரு நாத்திகவாதி என கேள்விப்பட்டேன். அது ஒரு அவநம்பிக்கையின் உணர்ச்சி வெளிப்பாடு, சொல்லப்போனால், நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள்? "எனது ஒழுக்கம் எங்கிருந்து வருகிறது? என்பதை அவர் அறிய விரும்பினார். அவரைப் பொருத்தவரை, மதத்தில் இருந்துதான் ஒழுக்கம் வருகிறது மற்றும் நம்பிக்கை இல்லாமல் உங்களால் ஒழுக்கமாக இருக்க முடியாது.

அதன் பிறகு பிற்பகலில் எனது நண்பர்களுக்கு நான் அனுப்பிய செய்தியில், நான் ஒரு நாத்திகன் என்பதை இனி எவரிடமும் கூறாதீர்கள். நான் சாக விரும்பவில்லை. தன்னிச்சையாக இருப்பதுதான் சிறந்தது என குறிப்பிட்டேன்.

தன்னிச்சையாக முடிவெடுக்க நான் கற்க வேண்டும்.

ஜாஃபர் இஸ்லாமிய தொழுகை குரலாளராக இருந்தார். தனது கிராமத்தில் உள்ள மசூதியில் தொழுகைக்கான குரலை அவர்தான் எழுப்புவார். தினமும் ஐந்து முறை தொழுகையில் ஈடுபடுவார். இஸ்லாமிய இறையியல் மாணவராக இருந்தார்.

தகவல் தொழில்நுட்ப துறையில் அவருக்கு வேலை கிடைத்தவுடன் குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேறினார், அதன் பிறகு மதம் தொடர்பான அவரது கருத்துகளும் மாறியதை அவர் கண்டுபிடித்தார்.

"இந்த மாற்றத்தை எனது குடும்பம் உணர்ந்தது. எனது எண்ணத்தை யாரோ கட்டி விட்டதாக அவர் நினைத்தார். எனது தாயார் புனித நீரை குடிக்கக் கொடுத்து உணவு அளித்து ஆசீர்வாதித்தார். எனது கட்டை அவை உடைத்து விடும் என அவர் நினைத்தார்."

இப்போதெல்லாம், வெள்ளிக்கிழமை தொழுகைக்கு நான் அவர்களுடன் செல்கிறேன். ஈகை பெருநாளை வெறும் சமூக சம்பிரதாயத்துக்காகக் கொண்டாடுகிறேன். எனக்கு நம்பிக்கை இல்லை என்பதை எனது குடும்பம் அறிந்தபோதும், நாத்திகனாக என்னை நிரூபிக்காதவரை எனக்கான இடத்தை அவர்கள் அளித்தே வருகின்றனர்.

"நீங்கள் சில விஷயங்களை செய்ய விரும்பினால், "ஆசாரமாக இருங்கள், பெற்றோருக்கு மரியாதை கொடுங்கள். பொது இடத்தில் உரியவாறு நடந்து கொள்ளுங்கள் - நம்பிக்கையற்றவராக இருப்பதில் இருந்து நீங்கள் விடுபட்டு விடலாம்."

சைபர் கிரைம் சட்டங்கள், அது பற்றிய விழிப்புணர்வை மட்டுமே ஏற்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறி நான் பேட்டி எடுக்கக் கோரியபோது, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மறுத்து விட்டது. ஆன்லைன் செயல்பாட்டாளர்கள் கடத்தப்படுவது பற்றியும் அவர்கள் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

பொது தளத்தில் உள்ள நாத்திகவாதம் பற்றிய அரசு தரப்பு கருத்தை ஆவணப்படமாக்கிய குன்வர் குல்துனே ஷாஹித் ஒரு பத்திரிகையாளர். மதத்துக்கும் அரசுக்கும் சவால் விடுக்கும் வகையில் ஆன்லைன் நாத்திகவாத செயல்பாட்டாளர்கள் விளங்குவதால் அவர்கள் கடத்தப்படுவதாக அவர் நம்புகிறார்.

பாகிஸ்தானில் இரண்டு புனித பசுக்கள் உள்ளன என்கிறார் அவர். "ஒன்று ராணுவம், மற்றொன்று இஸ்லாம். இந்த இரண்டு பசுக்களில் ஏதேனும் ஒன்றைப் பற்றி அதிகமாக அடிக்கடி சவால் விடுக்கும் பேசுபவர் மற்றதை பற்றியும் பேசுவார். அது இடம்பெறும் இணையதளங்களை நிர்வகிப்போர் ராணுவம் மற்றும் அரசின் கொள்கை காரணமாக கடத்தப்படுவதற்கு நிந்தித்ததல் என்பது வசதியான கருவியாக உள்ளது.

ஒரு வரியில் சொல்வதென்றால், விரிவாக நீளும் விமர்சனங்களை அவர்கள் வெறுமனே அமைதிப்படுத்திவிட்டனர்.

இந்தக் கட்டுரையில் உள்ள பெயர்கள், பங்களிப்பு வழங்கியவர்களின் அடையாளத்தை மறைப்பதற்காக மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்