பிரபல ஹாலிவுட் இயக்குனர் கர்டிஸ் ஹான்சன் மரணம்

ஆஸ்கார் விருது பெற்ற ''எல் ஏ கான்ஃ பிடன்ஷியல்'' திரைப்படத்தை இயக்கிய அமெரிக்க இயக்குநர் கர்டிஸ் ஹான்சன், ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு வயது 71.

படத்தின் காப்புரிமை AP
Image caption கர்டிஸ் ஹான்சன்

லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வளர்ந்து வந்த கர்டிஸ் ஹான்சன், 1970களில் தொடங்கி திரைக்கதை எழுதுவது மற்றும் திரைப்பட இயக்க பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், அவரது முதல் வெற்றித் திரைப்படம் 1992-இல் தான் வெளிவந்தது.

1992-இல் ஹான்சன் இயக்கத்தில் வெளியான ''தி ஹேண்ட் தட் ராக்ஸ் தி கிராடில்'' திரைப்படம், பழி வாங்கத் துடிக்கும் செவிலித்தாய் ஒருவரைப் பற்றிய கதையாகும்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1950-களில் நடந்த குற்றங்கள் தொடர்பான ஜேம்ஸ் எல்ராயின் ''எல் ஏ கான்ஃ பிடன்ஷியல்'' புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட ''எல் ஏ கான்ஃ பிடன்ஷியல்'' திரைப்படத்துக்கு ஆஸ்கர் விருதினை ஹான்சன் வென்றார்.

பின்னர், டெட்ராய்ட் நகர வீதிகளில் எடுக்கப்பட்ட ''8 மைல்'' திரைப்படத்தில், பிரபல பாடகர் எமினமை ஹான்சன் இயக்கியது பிரபலமாகப் பேசப்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள்