தமிழகம்: அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ள சங்ககால நகரம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கீழடி அகழாய்வுகளைத் தொடர கோரிக்கை

மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் இரண்டாம் கட்ட ஆய்வு இம்மாத இறுதியோடு, முடிவுக்கு வரும் நிலையில், கிடைத்திருக்கும் பொருட்கள் உற்சாகமளிப்பதால், மேலும் இதே இடத்தில் ஆய்வுகளைத் தொடர இந்தியத் தொல்லியல் துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டிருப்பதாக இங்குள்ள ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பிபிசி தமிழோசை செய்தியாளர் முரளீதரன் வழங்கும் காணொளிச் செய்தி

தொடர்புடைய தலைப்புகள்