ஷீமோன் பெரெஸிற்கு உலக தலைவர்கள் அஞ்சலி

இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஷீமோன் பெரெஸ் தனது 93ஆவது வயதில் இன்று காலமானார்; அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

நாட்டை பாதுகாப்பதில் முதன்மையானவர் என்றபோதும் அமைதியை போற்றும் மனிதராகவும் பெரெஸ் இருந்தார் என்று இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேடன்யாஹு தெரிவித்துள்ளார்.

பாலத்தீனத்துடன் 1993ஆம் ஆண்டு போடப்பட்ட "ஆஸ்லோ ஒப்பந்தத்தை நினைவு கூர்ந்து பேசிய அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், அமைதி மற்றும் சமரசம் ஆகியவற்றை தீவிரமாக ஆதரிக்கும் ஒரு மனிதரை மத்திய கிழக்கு பகுதி இழந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்லோ ஒப்பந்தத்திற்காக பெரெஸிற்கு கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பாலத்தீன அதிபர் மொகமத் அப்பாஸ், பெரெஸின் குடும்பத்தினருக்கு இரங்கல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில் பெரெஸை துணிச்சலான அமைதியின் கூட்டாளி என்று அழைத்துள்ளார்.

ஆனால் பாலத்தீன நாடாளுமன்ற உறுப்பினர் மூஸ்டஃபா பர்கூட்டி, அமைதி என்ற மாயையே பெரெஸ் உருவாக்கினார் என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் உருவாகிய 1948 ஆம் ஆண்டு இருந்த அரசியல்வாதிகளில் இப்போது வரை இருந்த கடைசி தலைவர்களில் சிலரில் பெரஸும் ஒருவர்.

இரண்டு முறை இஸ்ரேலின் பிரதமராகவும் ஒரு முறை நாட்டின் அதிபராகவும் இருந்துள்ளார் பெரெஸ். இஸ்ரேலின் அணுசக்தி திட்டத்தின் தந்தை என்றும் அவர் அழைக்கப்பட்டார்.

அவரின் உடல் வெள்ளிக்கிழ்மையன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள்ளது..

தொடர்புடைய தலைப்புகள்