தலைமுறைகள் கடந்து ஒலிக்கும் பாடல்களால் பிரபலமான லியோனார்டு கோவன் மறைவு

பிரபல கனடா பாடகரும், பாடலாசிரியருமான லியோனார்டு கோவன் தன்னுடைய 82-வது வயதில் காலமாகியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சுஸான் மற்றும் அல்லேலூயா பாடல் உள்பட பல பாடல்களால் பிரபலம் பெற்றவர் லியோனார்டு கோவன்

மோன்ரியோலில் பிறந்த இவர், 60-களின் பிற்பகுதியில் ஹிப்பி எதிர் கலாசாரத்தின் ஒரு பகுதியாக மாறுவதற்கு முன்னால் புலவராகவும், கதாசிரியராகவும் வாழ்க்கையை தொடங்கினார்.

அவருடைய கரகரப்பான மற்றும் மெருகூட்டப்பட்ட தனித்துவமான குரல், பெரும்பாலும் சோக ரசம் கலந்த பாடல் வரிகளும் அவருக்கென்று ஒரு பக்தி மிகுந்த ரசிகர் கூட்டத்தை உருவாக்கின.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption லியோனார்டு கோவனின் மோன்ரியோல் வீட்டில் அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்

எப்போதும் பெரும்பாலும் கேட்கப்படும் பாடல்களில் ஒன்றான, சுஸான் மற்றும் அல்லேலூயா பாடல் உள்பட பல பாடல்களால் பிரபலம் பெற்றவர் கோவன்.

அவருடைய பாடல்கள் பல தலைமுறைகளை கடந்து எதிரொலிக்கின்றன என்றும், கனடாவுக்கும், உலகத்திற்கும் அவரது மறைவு பெரும் இழப்பாகும் என்றும் அஞ்சலி செலுத்திய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருக்கிறார்.

Image caption 1980 ஆம் ஆண்டு லியோனார்டு கோவன்

யுதராக பிறந்த அவர், பின்னர் பௌத்த துறவியாக மாறி, பிறகு தன்னை யூதராகவும், பௌத்த துறவியாகவும் கருதினார்.

தொடர்புடைய தலைப்புகள்