50 வயதில் பாப் பாடகர் ஜேனட் ஜாக்சனுக்கு முதல் குழந்தை பிறந்தது

தனது 50-ஆவது வயதில் பாப் நட்சத்திரமான ஜேனட் ஜாக்சன், அவரது முதல் குழந்தையை பெற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தன் கணவருடன் ஜேனட் ஜாக்சன்,

மைக்கேல் ஜாக்சனின் இளைய சகோதரியான ஜேனட் ஜாக்சனுக்கு ஈஸா என்ற மகன் சுகப்பிரசவத்தில் மூலம் பிறந்துள்ளான்.

விஸாம் அல் மானா என்ற பெயருடைய அவரது கணவர் கத்தார் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ஆவார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு இசைப்பயணத்தை தனது பிரசவத்தையொட்டி ஜேனட் ஜாக்சன் தாமப்படுத்தியிருந்தார்.

படத்தின் காப்புரிமை PA

இசைப்பயணத்தை தாமதப்படுத்தியதற்கான காரணங்களை தனது ரசிகர்களிடம் விளக்கிய ஜேனட் ஜாக்சன், மருத்துவர்கள் தன்னை ஒய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியிருந்ததாக தெரிவித்தார்.

அதே சமயம், தான் கருவுற்று இருந்ததை அவர் வெளிப்படுத்தவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்