"லா லா லாண்ட்" பிரிட்டிஷ் பாஃப்டா விருதை வென்றது

அமெரிக்காவின் திரையிசைப் படமான "லா லா லாண்ட்", பிரிட்டன் அக்காடெமி விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA/PA
Image caption நேற்றிரவு சிறந்த விருதுகளை பெற்ற இம்மா ஸ்டோன் மற்றும் தேவ் பட்டேல்

இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ள ஆஸ்கார் விருதுகளுக்கு முன்னால், நடைபெறும் கடைசி முக்கிய விருது வழங்கும் நிகழ்வான பிரிட்டன் அக்காடெமி விருதுகளில், சிறந்த இயக்குநர் டாமியன் சாஸெல்லி மற்றும் சிறந்த நடிகை இம்மா ஸ்டோன் உள்பட 5 விருதுகளை "லா லா லாண்ட்" திரைப்படம் வென்றுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP/Getty
Image caption "பென்சஸ்" திரைப்பட கதாபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகை விருதை வென்ற வியோலா டாவிஸ்

சிறந்த நடிகர் பிரிவில் "மான்செஸ்டர் பை த சி" என்ற திரைப்படத்திலுள்ள கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காசெ அஃப்லீக், சிறந்த நடிகர் பரிசை வென்றதால், லா லா லேண்ட் படத்தில் ஸ்டோனின் ஜோடியாக நடித்த நடிகர் ரெயன் கோஸ்லிங்க்குக்கு விருது கைநழுவிப்போனது.

படத்தின் காப்புரிமை PA

சிறந்த துணை நடிகர் விருது "லயன்" படத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தேவ் பட்டேலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

"பென்சஸ்" திரைப்பட கதாபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகை விருதை வியோலா டாவிஸ் வென்றுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்