வெறுப்பால் வளரும் காதல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வெறுப்பால் வளரும் காதல்

எல்லாவிதமானவர்களுக்கும் துணையை தேட உதவும் டேட்டிங்(ஆப்) செயலிகள் செயல்படுகின்றன.

புதிதாக வந்துள்ள 'ஹேட்டர்' எனும் செயலி இருவரின் பொதுவான வெறுப்பை அடிப்படையாக வைத்து ஜோடிசேர்க்கிறது

ஒரே விஷயத்தை வெறுக்கும் இருவர் நெருங்கி வர முடியும் என்கிறது விஞ்ஞான ஆய்வு

ஒரே விஷயத்தை விரும்புபவர்களைவிட வெறுப்பவர்கள் நெருக்கமாவது அதிகம் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன

நகைச்சுவையாக துவங்கியதை பலர் பயன்படுத்துவதாக கூறுகிறார் இதன் நிறுவனர் பிரெண்டன் ஆல்பர்

மக்கள் எதை அதிகம் வெறுக்கிறார்கள்? அமெரிக்கத் தேர்தல் முதலிடத்தில் இருக்கிறது

நாகரிகக் குறைவான நடைபாதை செயற்பாடுகள், நடத்தைகளும் அதிகம் வெறுக்கப்படுகின்றன

இந்த செயலியை பயன்படுத்தும் லண்டன் நியூயார்க்வாசிகள் பொறுமையை சோதிப்பதாக புகார் செய்கிறார்கள்

வெறுப்புக்கும் விருப்பத்துக்கும் இடையிலேயே ஆண்/பெண்களுக்கு இடையிலான காதல் வாழ்கிறது

மிருககாட்சிசாலையை பெண்கள் வெறுக்க ஆண்கள் ரசிக்கிறார்கள்; பானங்களை கலப்பவர் மீதான பார்வையும் அதுவே

மருதாணி மூலமான பச்சைகுத்தலை பெண்கள் விரும்ப, ஆண்கள் அதை அடியோடு வெறுக்கிறார்கள்

ஹேட்டர்செயலி பயன்பாட்டாளர்களுக்கு "வெறுப்பு" என்பது வெறுக்கத்தக்க குணமே அல்ல

"வெறுப்பின் பயனைமாற்றி காதலுக்கான கருவியாக்கி, மனிதரை ஒன்றிணைப்பதே எங்கள் இறுதி இலக்கு, லட்சியம்"என்கிறார் இதன் நிறுவனர் பிரெண்டன் ஆல்பர்.