பிரபலமாகும் பீர் யோகா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரபலமாகிவரும் பீர் யோகா

எத்தனையோ யோகா பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பீர் யோகா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

“நாங்கள் இரண்டு விஷயங்களை ஒன்றிணைக்கிறோம். ஒன்று பீர் குடிப்பது இரண்டாவது யோகா செய்வது” என்கிறார் இதன் நடத்துநர்.

பீர் பாட்டில் மீது ஒட்டுமொத்த கவனத்தையும் குவித்தபடி தாங்கள் தியானம் செய்வதாக இதை செய்பவர்கள் கூறுகிறார்கள்.

“யோகாவால் கவனக்குவிப்புத்திறன் மேம்படுகிறது; அத்தோடு பீர் குடிப்பதால் கிடைக்கும் இன்பத்தை கலக்கும்போது அதிகபட்ச பரவசநிலையை, உள்ளொளி எழுச்சியை உங்களால் அடைய முடியும்” என்கிறார் பீர் யோகா பயிற்றுவிப்பாளர்.

இது தனக்கு புது அனுபவம் என்று கூறும் இதை கற்க வந்த இளம் பெண் ஒருவர், “பீர் இல்லாமல் நான் கூச்சப்படுவேன். ஆல்கஹால் எனக்கு தைரியமளித்து யோகாவை இன்ப அனுபவமாக்குகிறது”, என்கிறார்.

ஜெர்மனியில் ஆரம்பித்த இந்த பீர் யோகா தற்போது ஆஸ்திரேலியா, தாய்லாந்தில் வேகமாக பிரபலமாகி வருகிறது.

நீங்கள் பீர்காதலராக இருந்தபடி யோகா செய்பவராக இருக்கலாம் அல்லது யோகியாக வாழ்ந்தபடி பீர்குடிக்க நினைக்கலாம்.

நீங்கள் யாராக இருந்தாலும் கையில் ஒரு பீர்பாட்டில், கவனமெல்லாம் யோகா அதுவே பீர்யோகா.