ராஜேஷ் கன்னா காலமானார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 ஜூலை, 2012 - 09:38 ஜிஎம்டி
ராஜேஷ் கன்னா, டிம்பிள் கபாடியாவுடன்

ஹிந்தி "காதல் மன்னன்" ராஜேஷ் கன்னா மரணம்

பிரபல ஹிந்தித் திரைப்பட நடிகர் , ராஜேஷ் கன்னா காலமானார்.

அவருக்கு வயது 69.
சமீபகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த ராஜேஷ் கன்னா இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் மும்பை மருத்துவமனை ஒன்றிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

1960களின் மத்தியில் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய ராஜேஷ் கன்னா, 1970களில் ஹிந்தி திரையுலகின் மிகப் பிரபலமான நடிகரானார். சுமார் 160க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருந்தார்.
காதல் பாத்திரங்களில் நடித்து பிரபலமான அவர் நடித்து 1969ல் வெளிவந்த " ஆராதனா" திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது நினைவிருக்கலாம்.

ராஜேஷ் கன்னா 1992ல் புது தில்லி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.