சங்கரமூர்த்தியின் இறுதிச் சடங்குகள் நடந்தேறின

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 செப்டம்பர், 2012 - 17:25 ஜிஎம்டி
சங்கரமூர்த்தி

அண்மையில் காலமான தமிழோசையின் முன்னாள் துறைப் பொறுப்பாளர் ஷங்கர் சங்கரமூர்த்தியின் இறுதிக் கிரியைகள் லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் தகன மையத்தில் ஞாயிறன்று நடந்துள்ளன.

சங்கரண்ணாவின் உறவினர்கள் நண்பர்கள் பிபிசி சகாக்கள் உள்ளிட்டோர் இந்த இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர்.

பிபிசி கிழக்காசியத்துறைகளின் பொறுப்பாளர் டேவிட் பேஜ், வில்லியம் கிராலி, கைலாஷ் புத்வார், பிபிசி நேபாளப் பிரிவின் முன்னாள் தலைவர் ககேந்திர நேபாளி, பிபிசி ஹிந்தி பிரிவின் தலைவர் அச்சலா ஷர்மா உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் சங்கரண்ணாவின் தொழில் திறன் மற்றும் அவருடன் பழகிய அனுபவங்கள் குறித்துப் பேசி அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.


இறுதிச் சடங்குக்கு வந்தவர்களுக்கு சங்கரண்ணாவின் மகள் அபயா நன்றி கூறினார்.


சங்கரண்ணா இயற்றி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய "திருச்செந்தூர் வடிவேலையா" என்ற பாடல் இறுதிச் சடங்கில் ஒலிக்கப்பெற்றது.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.