கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 டிசம்பர், 2012 - 15:48 ஜிஎம்டி
கமல்ஹாசன்

கமல்ஹாசன்

பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் திரைப்படத்தினை திரையரங்குகளில் படம் திரையிடப்படுவதற்கு முன்னதாகவே, டிடிஎச் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி தொலைக்காட்சிச் சேனல்களில் காண்பிக்க செய்துவரும் ஏற்பாட்டினைத் திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இது குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் பயனளிக்கவில்லை என நம்மிடம் திரையரங்க உரிமையாளர் சங்கப் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பங்கள் மூலம் இல்லங்களுக்குத் திரைப்படத்தைக் கொண்டு செல்வது ஒட்டுமொத்தமாகத் தொழிலினை அழித்துவிடும் என்றார் அவர்.

கமல்ஹாசனோ தனது முயற்சி, திரைத் தொழிலுக்குப் புதிய பரிமாணம் சேர்க்கும் என வாதிடுகிறார். இதுபோல செய்தால் திருட்டு விசிடி பிரச்சினையும் குறையும் என்ற வாதமும் வைக்கப்படுகிறது. ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் அவரது வாதங்களை ஏற்பதாக இல்லை. கமலை ஆதரிக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களுடனும் தாங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் எதுவுமில்லை என்றும் பன்னீர்செல்வம் கூறுகிறார்.

அடுத்தகட்டமாக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லவிருப்பதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.