ஆஸ்கர் வென்ற ஒலிப்பதிவாளர் ஹோப்கின்ஸ் விபத்தில் பலி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 டிசம்பர், 2012 - 17:09 ஜிஎம்டி
நடிகை ஜெனிஃபர் கார்னருடன் 2006 ஆஸ்கார் நிகழ்வில் ஒலிப்பதிவாளர் மைக்கல் ஹோப்கின்ஸ்

நடிகை ஜெனிஃபர் கார்னருடன் 2006 ஆஸ்கார் நிகழ்வில் ஒலிப்பதிவாளர் மைக்கல் ஹோப்கின்ஸ்

Lord of the Rings உள்ளிட்ட படங்களுக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றிருந்த நியூசிலாந்தின் பிரபல ஒலிப்பதிவாளர் மைக்கல் ஹோப்கின்ஸ் விபத்தொன்றில் பலியாகியுள்ளார்.

நியூசிலாந்தின் வடக்குத் தீவொன்றில் உள்ள ஆற்றில் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோதே மைக்கல் ஹோப்கின்ஸ் படகிலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.

அவருடன் படகிலிருந்த மற்ற இரண்டுபேரும் உயிர் தப்பிவிட்டனர்.

53 வயதான மைக்கல் ஹோப்கின்ஸ் 2003-ம் ஆண்டில் Lord of the Rings படமான Two Towers படத்துக்காக சிறந்த ஒலிப்பதிவுக்கான ஒஸ்கார் விருதை வென்றவர்.

அதன்பின்னர் 2006-ம் ஆண்டிலும் கிங்கொங் ரீமேக் படத்திற்காகவும் இன்னொரு ஆஸ்கார் விருதை அவர் வென்றிருந்தார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.