மூன்றாவது முறையாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை வென்றார் டேனியல் டே லூயிஸ்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 பிப்ரவரி, 2013 - 10:08 ஜிஎம்டி
சிறந்த நடிகர் விருதுடன் டேனியல் டே லூயிஸ்

சிறந்த நடிகர் விருதுடன் டேனியல் டே லூயிஸ்

பிரிட்டிஷ் நடிகர் டேனியல் டே லூயிஸ் மூன்றாவது முறையாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்று ஹாலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கிய 'லிங்கன்' படத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் அப்ரஹாம் லிங்கனாக நடித்ததற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

சிறந்த திரைப்படத்துக்கான விருதை 1979ல் நடந்த இரானில் பணயக் கைதி விடுவிப்பு நெருக்கடி சம்பந்தமாக பென் அஃப்லெக் இயக்கிய 'ஆர்கோ' என்ற படம் வென்றது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா, வெள்ளை மாளிகையில் இருந்தபடி வீடியோ இணைப்பு மூலமாக சிறந்த படம் எது என்பதை அறிவித்தார்.

சிறந்த இயக்குநருக்கான விருது 'லைஃப் ஆஃப் பை' என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ஆங் லீக்கு வழங்கப்பட்டது.

இம்முறை வேறு எந்த ஒரு படத்தைக் காட்டிலும் நான்கு விருதுகளை 'லைஃப் ஆஃப் பை' வென்றது.

'சில்வர் லைனிங் பிளே புக்' என்ற படத்தில் நடித்திருந்த ஜெனீஃபர் லாரன்ஸ் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.

பிரஞ்சு மொழியில் மைக்கேல் அனகேவின் இயக்கத்தில் எடுக்கப்பட்ட சோகச் சித்திரமான 'அமூர்' சிறந்த வேற்று மொழிப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் பிரிட்டிஷ் பாடகி அடெல் பாடிய 'ஸ்கைஃபால்' என்ற பாடல் சிறந்த திரைப்படப் பாடலுக்கான விருதைப் பெற்றது.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.