உலக வங்கி தலைவராக மீண்டும் ஜிம் யோங் கிம்?

உலக வங்கியின் தற்போதைய தலைவரான ஜிம் யோங் கிம் தான், உலக வங்கி தலைவர் பதவிக்கு மீண்டும் ஒரு ஐந்து ஆண்டு பதவிக்காலத்துக்கு நியமனம் செய்யப்பட்ட ஒரே நபர் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Alex Wong
Image caption ஜிம் யோங் கிம் (கோப்புப் படம்)

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு, ஜிம் யோங் கிம்மின் பெயரை கடந்த மாதம் அமெரிக்க அரசு முன்மொழிந்தது.

இரண்டாவது உலகப் போருக்கு பின்னர், உலக வங்கி உருவாக்கப்பட்டதிலிருந்து, உலக வங்கியின் தலைவராக அமெரிக்கர்களே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தென் கொரிய தலைநகரான சோல் நகரில் பிறந்த கிம், தனக்கு ஐந்து வயதான போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளார். பின்னர், ஜிம் யோங் கிம் அமெரிக்காவில் வளர்ந்து வந்தார்.

தொடர்புடைய தலைப்புகள்