அதிகரிக்கும் இழப்புகளால் டிவிட்டர் நிறுவனத்தின் பணியிடங்களில் வெட்டா?

அதிகரித்துவரும் நஷ்டங்களை சமாளிக்கும் முயற்சியாக தனது பணியாளர்களில் எட்டு சதவீதத்தினரை குறைக்க டிவிட்டர் வலைத்தள நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Bethany Clarke/getty images

கடந்த ஆண்டு செய்தது போல இம்முறையும் கிட்டத்தட்ட 300 பணியாளர்களின் பணிகள் வெட்டப்படுகிறது என்ற அறிவிப்பினை டிவிட்டர் வலைத்தள நிறுவனம் அறிவிக்கலாம் என்று ப்ளூம்பெர்க் நிதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடைசியாக இந்நிறுவனத்தை வாங்க சாத்தியமிருந்த ஒரு வாங்குபவர், தாங்கள் இந்த முயற்சியில் ஈடுபட போவதில்லை என்று கூறிவிட்டதால், 400 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வருடாந்திர இழப்புகளை சந்தித்து வரும் டிவிட்டர் நிறுவனம், நிச்சயமற்ற ஒரு எதிர்காலத்தை சந்திக்கிறது .

தொடர்புடைய தலைப்புகள்