சீனா: வூகான் கிராம மக்கள் கலவர தடுப்பு போலிசாரோடு மோதல்

ஒரே கட்சியால் ஆளப்படுகின்ற சீனாவில் உண்மையான ஜனநாயக சீர்திருத்தத்தின் அரியதொரு எடுத்துக்காட்டாக முன்பு போற்றப்பட்ட ஒரு கிராமவாசிகளோடு சீன அதிகாரிகள் வன்முறை மோதல்களில் ஈடுபடுவதாக காட்டுகின்ற காணொளிப் பதிவுகள் வெளியாகியுள்ளன.

Image caption கலவரத் தடுப்பு போலிஸார் வீடுகளில் புகுந்து கைது

தென் பகுதி வூகான் மீனவ கிராமவாசிகளோடு கண்ணீர் புகை குண்டுகளோடு கலவரத் தடுப்பு காவல்துறையினர் மோதிக்கொண்டிருப்பதை இந்த காணொளி காட்டுகிறது. கிராமவாசிகள் கற்கள் மற்றும் பாட்டில்களை எறிந்து பதில் தாக்குதல் நடத்துகின்றனர்.

தாங்கள் தேந்தெடுத்த கிராமத் தலைவரை கடந்த வாரம் சீனா சிறையில் அடைத்ததற்கு எதிராக இந்த கிராம மக்கள் போராடி வருகிறார்கள். அதிகாரிகள் தற்போது வீடுகளில் புகுந்து, இதுவரை 13 பேரை கைது செய்திருக்கின்றனர்.

ஊழல் கம்யூனிஸ்ட் அதிகாரிகள் தங்களுடைய நிலத்தை சட்டபூர்வமற்ற முறையில் விற்றனர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக , இக்கிராம மக்கள் முதல்முறையாக 2011 ஆம் ஆண்டு ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடினர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுபாடுகளில் இருந்து ஒப்பீட்டளவில் சுதந்திரமான தேர்தலை நடத்தும் சலுகையை அவர்கள் பெற முடிந்தது.

தொடர்புடைய தலைப்புகள்