முன்னாள் சபாநாயகரை வெளியேற்ற பிரேசில் கீழவையில் பெரும்பாலோர் ஆதரவு

பிரேசில் முன்னாள் அதிபர் தீல்மா ரூசெஃப் மீது குற்றம் சுமத்துவதற்கு பரப்புரையை வழிநடத்தியவராக பரவலாக பார்க்கப்படும் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரை அவையலருந்து நீக்க பிரேசில் கீழவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்களித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption எட்வார்டூ கூன்யா

நாட்டின் பெட்ரோபிராஸ் எண்ணெய் நிறுவனத்துடன் தொடர்புடைய பெரியதொரு ஊழலில் எட்வார்டூ கூன்யா மில்லியன் கணக்கான டாலர்களை பெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

அவர் ஸ்விஸ் வங்கி கணக்குகள் வைத்திருப்பதை மறுத்திருந்தார். ஆனால், சுவிஸ் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட தகவல்கள் அதற்கு மாறாக அமைந்தன.

இப்போது கூன்யா தண்டனையிலிருந்து விலக்கு பெறுகின்ற பகுதி உரிமையை இழக்கிறார். ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக உடனடியாக கைதாக இருக்கிறார்.

பிரேசிலின் மதிப்பிழந்த அரசியல் கட்டமைப்பிலுள்ள பலரை வெளிச்த்துக்குக் கொண்டுவரககூடியதாகக் கருதப்படும் தகவல்களை வெளியிடப்போவதாக அவர் அச்சுறுத்தியுள்ளார்.