நைஜீரியா: ஊட்டச்சத்து பற்றாக்குறையால் 50,000 குழந்தைகள் உயிரிழக்கும் சூழல்

வடக்கு நைஜீரியாவில் உள்ள 50,000 குழந்தைகளுக்கு, வரக்கூடிய 12 மாதங்களில் ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அவர்கள் உயிரிழக்க நேரிடும் என மூத்த ஐ.நா அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை பிபிசி
Image caption நைஜீரிய குழந்தைகள்

எதிர்பார்த்ததைவிட நிலைமை மோசமானதாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பின் ஊட்டச்சத்திற்கான தலைவர் அர்ஜன் டி வாக்ட், பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியவாத தீவிரவாத அமைப்பான போக்கோ ஹரம், பின்வாங்க கட்டாயப்படுத்தப்பட்ட பிறகு இந்த பகுதி ஏப்ரல் மாதத்தில் இருந்து திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

போர்னோ மாநிலத்தில் ஐந்தில் ஒரு குழந்தை உயிரிழக்கும் அளவிற்கு சுமார் 2.5 லட்சம் குழந்தைகள் தீவிரமாக ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிப்படைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட போலியோ திரும்ப வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.