எபோலா காய்ச்சலின் உயர் வெப்பநிலையை மறைத்ததாக ஸ்காட்லாந்து செவிலியர் மீது குற்றச்சாட்டு

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு , சியரா லியோனில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டு, இறந்து போக கூடிய நிலையில் இருந்த ஸ்காட்லாந்தை சேர்ந்த செவிலியர் ஒருவர், தவறான நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்டு வருகிறார்.

Image caption எபோலா வைரஸ்

பாலின் கேஃபர்கி என்ற இந்த செவிலியர் எபோலா நோயால் முழுவதுமாக பாதிக்கப்படுவதற்கு முன்பு, பிரிட்டனுக்கு திரும்பும் போது, அவருக்கு ஏற்பட்ட காய்ச்சலின் உயர் வெப்பநிலையை அவர் மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கேஃபர்கி மீது , லண்டன் ஹீத்ரோ விமானநிலையத்தில் செய்யப்பட்ட சோதனையின் போது, அவரது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. பின்பு, அவர் கிளாஸ்கோவிற்கு செல்வதற்கான விமானத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption எபோலா நோய் பாதிப்பு (கோப்புப்படம்)

விமானத்தில் உள்ள மருத்துவ பணியாளர்களிடம் அவர், தான் பேரசிட்டமோல் மாத்திரை எடுத்துள்ளதாக தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு நிரூபணமானால், அவர் தனது தொழில்முறை உரிமத்தை இழக்க நேரிடும்.