ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஹங்கேரியை வெளியேற்ற லக்சம்பர்க் வெளியுறவு அமைச்சர் கோரிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுக்க நெறிமுறைகளை மீறியதற்காக, ஹங்கேரி, ஒன்றியத்தில் இருந்து தாற்காலிக இடைநீக்கம் செய்யப்படவேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் என லக்சம்பர்க் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் அசெல்போர்ன் தெரிவித்துள்ளார். அவரது கருத்து சமரசமற்ற தாக்குதல் போன்று இருந்தது.

Image caption விக்டர் ஓர்பன்

அசெல்போர்ன் பேசுகையில், விக்டர் ஓர்பனின் கீழுள்ள ஹங்கேரியின் தேசியவாத அரசு, கிட்டத்தட்ட வனவிலங்குகளை நடத்துவது போல குடியேறிகளை நடத்துகிறது. அவர்கள் வெளியிலேயே இருக்குமாறு முள் வேலிகளை அமைத்துள்ளது. ஹங்கேரி அவர்களை சுட ஆணைகள் பிறப்பிக்க வெகு தூரம் இல்லை என்று தெரிவித்தார்.

அவர் மேலும், ஹங்கேரி தனது நாட்டில் ஊடகம் மற்றும் நீதித் துறையில் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹங்கேரியில் அமைக்கப்பட்டுள்ள முள் வேலி தடுப்புகள் (கோப்புப்படம்)

அசெல்போர்ன் ஹங்கேரியில் உள்ள நிலைமை சகிக்க முடியாததாக உள்ளது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தனது விதிமுறைகளை மாற்றி, சந்தேகத்திற்குரிய உறுப்பு நாடுகளை வெகு எளிதாக இடைநீக்கம் செய்வதற்கு ஏற்றவாறு மாற்றவேண்டும் என்றார்.