"பல நாடுகள் ஐ நா மனித உரிமைகள் ஆணையத்துடன் ஒத்துழைப்பதில்லை"

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஐ நா மனித உரிமைகள் ஆணையர் சையத் ரா அத் ஹுசைன்

மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையாளர்களுடன் ஒத்துழைக்காத நாடுகளின் பட்டியல் வளர்ந்துவருவதை ஐ நா மனித உரிமைகள் ஆணையர் சையத் ரா அத் ஹுசைன் விமர்சித்துள்ளார்.

தற்போது நடைபெற்றுவரும் ஐ நா மனித உரிமைகள் பேரவையின் துவக்கவுரையில் இந்த விமர்சனத்தை அவர் வெளியிட்டார்.

சிரியாவில் உள்ள நிலவரத்தை கண்டித்துள்ள அவர், எப்பேற்பட்ட ஆழமான வார்த்தைகளும் அதற்கு ஆறுதல் கூறாது எனவும் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஐ நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம்

ஒரு மருத்துவரின் தலைமையில் அங்கு நடைபெறும் ஆட்சி, தமது மக்கள் மீதே பாதிப்புகளை ஏற்படுத்தும் வாயுக்களை செலுத்துவது நினைத்துப்பார்க்க முடியாதது என ஐ நா மனித உரிமைகள் ஆணையர் கூறியுள்ளார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனது பிரதிநிதிக்கு வெனிசுவேலா விசா வழங்காதது குறித்தும் அவர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

அதேபோல பெலாரூஸ், எரித்ரியா, வட கொரியா, இரான் ஆகிய நாடுகளும் ஐ நா மனித உரிமைகள் ஆணையப் பிரதிநிதிகளுக்கு நீண்டகாலமாக அனுமதி வழங்காததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பல நாடுகள் தமது கண்காணிப்பாளர்களுக்கு அனுமதியை மறுத்தாலும், ஐ நா மனித உரிமைகள் ஆணையம் அவர்கள் மீதான கண்காணிப்பை நிறுத்தாது எனவும் அவர் வலியுறுத்தினார்.