ஸ்பானிய மொழியில் பாலிவுட் சேனல் – ஜீ தொலைக்காட்சியின் புது முயற்சி

இந்திய தொலைக்காட்சி சேனலான, ஜீ தொலைக்காட்சி, அமெரிக்காவின் ஸ்பானிய நேயர்களைக் கவர, ஸ்பானிய மொழியில் பாலிவுட் படங்களை ஒளிபரப்பும் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளது.

Image caption பாலிவுட் படங்களை ஸ்பானிய மொழியில் ஒளிபரப்ப முயற்சி

இந்த சேனலில் ஸ்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்ட ஹிந்தி மொழிப் படங்கள் காட்டப்படும் என்று ஜீ எண்டர்டெயின்மெண்ட் எண்டர்ப்ரைஸஸ் நிறுவனம் கூறியுள்ளது.

கலாசார எல்லைகளை இந்த நிகழ்ச்சிகள் கடக்கும் என்றும் உணர்வுகளை உற்சாகமாகவும், உரத்தும் வெளிப்படுத்தும், லத்தீன் அமெரிக்க திரைப்படங்களுக்குப் பழகிப் போன ஸ்பானிய ரசிகர்களுக்கு இந்தப் படங்கள் பிடிக்கும் என்றும் அந்நிறுவனப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

தன்னிடம் இருக்கும் அனைத்து ஹிந்திப் படங்களையும் டப்பிங் செய்து ஒளிபரப்பப்போவதாக்க் கூறும் இந்த நிறுவனம், மெக்சிகோ, அர்ஜெண்டினா , கொலம்பியா , பெரு மற்றும் சிலி ஆகிய நாடுகளுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தவிருக்கிறது.

இந்தியாவில் அதிக அளவில் தயாரிக்கப்படும் பாலிவுட் திரைப்படங்களுக்கு, ஏற்கனவே நைஜீரியா, சீனா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் சில பகுதிகளில் ரசிகர்கள் உண்டு.

தொடர்புடைய தலைப்புகள்