ஆஸ்திரேலிய அரசியல் விவகாரங்களில் சீனாவின் தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை

ஆஸ்திரேலிய நாட்டு அரசியல் விவகாரங்களில், அதிகரித்து வரும் சீனாவின் தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை US EMBASSY CANBERRA
Image caption ஜான் பெர்ரி

சீனாவின் நலன்களை மேம்படுத்த, ஆஸ்திரேலியா அரசியல் களத்தில் சீனாவின் பணம் அதிக அளவில் திருப்பிவிடப்படுகிறது என்று ஆஸ்திரேலியாவுக்கான அமெரிக்க தூதரான ஜான் பெர்ரி, ஒரு செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டினரிடமிருந்து அரசியல் நன்கொடைகள் பெறுவதை அமெரிக்கா தடை செய்துள்ளது. ஆனால், இது போன்ற சட்டம் எதுவும் ஆஸ்திரேலியாவில் அமலில் இல்லை.

ஆஸ்திரேலிய அரசியல் விவகாரங்களில், சீனா காட்டி வரும் ஈடுபாட்டின் அளவால் அமெரிக்கா வியப்படைந்துள்ளதாக ஜான் பெர்ரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்