சிரியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் இல்லாவிட்டால் பலர் பலியாகியிருப்பார்கள்: ஜான் கெர்ரி

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரி, சிரியாவில் போர் நிறுத்தம் குறித்த அமெரிக்கா-ரஷியா இடையேயான ஒப்பந்தத்தின் மீதான விமர்சனத்தை எதிர்கொள்ளும் போது, அந்த ஒப்பந்தம் இல்லாதிருந்தால், பல சிரிய நாட்டு மக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் அல்லது வெளியேற வலுக்கட்டாயப்படுத்தப் பட்டிருப்பார்கள் என்று கூறயிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிரியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் இல்லாவிட்டால் பலர் பலியாகியிருப்பார்கள்: ஜான் கெர்ரி

தேசியப் பொது வானொலியில் நடந்த ஒரு நேர்காணலில் இந்த ஒப்பந்தத்திற்கு மாற்று என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில், கெர்ரிக்கும், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் அஷ்டன் கார்ட்டருக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளது என்று அமெரிக்க ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.