ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரஸுக்கு தீவிர சிகிச்சை

இஸ்ரேல் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரஸின் உடல் நிலை சற்றே மேம்பட்டுள்ளது ,ஆனால் இன்னும் அவர் மோசமான நிலைமையில்தான் இருக்கிறார் என்று அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை VT Freeze Frame
Image caption இஸ்ரேல் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரஸ் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார் (கோப்புப்படம்)

செவ்வாய்க்கிழமையன்று, பெரஸ் பெரும் மூளை ரத்தக்குழாய் வெடிப்பால் ( ஸ்ட்ரோக்) பாதிக்கப்பட்டார்.

நோபல் பரிசு பெற்ற 93 வயதான இவர், இஸ்ரேலிய அரசாங்கத்தில் பல உயர்மட்டப் பதவிகளை வகித்துள்ளார். .

இவர் இரண்டு முறை பிரதமராகவும், பின்னர் அதிபராகவும் பதவி வகித்தார். அவர் தனது பதவிக்காலம் 2014 -ல் முடிவுக்கு வந்ததற்கு பிறகு பதவி விலகினார்.