ஆஸி அவையில் முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முஸ்லிம்களுக்கு எதிராக பேசிய பாலின் ஹான்சன்

ஆஸ்திரேலியா முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் உள்ளது என சர்ச்சைக்குரிய ஆஸ்திரேலிய அரசியல்வாதி பாலின் ஹான்சன் கூறியுளார்.

நாடாளுமன்றத்தில் இருபது ஆண்டுகளில் முதல் முறையாக உரையாற்றிய பாலின் ஹான்சன் அம்மையார், ஆஸ்திரேலியாவுக்குள் குடியேறிகளாக மேலும் முஸ்லிம்கள் வருவது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனக் கோரினார்.

அதேபோல் உடலை மறைக்கும் வகையில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா உடையும் தடை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது பல உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேறினர்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் திருமதி ஹான்சன் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு தேர்வானார்.

அவர் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, ஆசியர்களால் ஆஸ்திரேலியா ஆக்கிரமிக்கப்படுகிறது என எச்சரித்திருந்தார்.