மியான்மாரில் அழியும் பௌத்த ஆலயங்களை பாதுகாக்க முயற்சி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மியான்மாரில் அழியும் பௌத்த ஆலயங்களை பாதுகாக்க முயற்சி

மியான்மாரில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் புராதன நகரான பகான் பகுதியில், பகோடாக்கள் எனப்படும் 400 பௌத்த ஆலயங்கள் சேதமடைந்தன.

இவற்றை அவசர அவசரமாக சீர் செய்வதை விட, முறையான வகையில், முன்னர் செய்த தவறுகள் ஏற்படாத வண்ணம் பொறுமையாக அந்தப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என தொல்பொருள் பாதுகாப்பு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அப்படிச் செய்யும்போது பகான் பகுதி இப்புவியில் மிகவும் மதிப்பு வாய்ந்த ஒரு இடமாக எதிகாலத்தில் இருக்கும் என மியான்மார் நம்புகிறது.

பகானை உலக மரபுச் சின்னமாக அறிவிக்க மியான்மார் முயற்சிகளை எடுத்து வருகிறது.

இது குறித்து பிபிசியின் சிறப்புக் காணொளி