நலமாகவும், உடல் தகுதியுடனும் உள்ளார் ஹிலரி: மருத்துவர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன், தனக்கு நிமோனியா இருப்பதாக கண்டறியப்பட்டது தொடர்பாக கூடுதல் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption கோப்புப் படம்

ஹிலரி கிளிண்டன் பரவும் வகையல்லாத நோயினால் பாதிப்படைந்துள்ளதாகவும், அவர் பத்து நாட்களுக்கு உட்கொள்ள வேண்டிய ஆண்டிபயாடிக்குகள் (நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள்) பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், ஹிலரியின் பிரச்சாரக் குழு தெரிவித்துள்ளது.

ஹிலரி குணமடைந்து வருவதாக கூறியுள்ள அவரது மருத்துவர், ஹிலரி ஆரோக்யமாக இருப்பதாகவும், அமெரிக்க அதிபராக செயல்பட தேவையான உடல்தகுதியுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்டு டிரம்ப், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், தனது மருத்துவர் நடத்திய ஒரு அண்மைய மருத்துவ சோதனை தான் அதிக எடையுடன் இருப்பதை காட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்