சீனப் பெருநிலப் பரப்பில் கரை கடந்தது மெரான்டி சூறாவளி

படத்தின் காப்புரிமை EPA
Image caption தைவானை தாக்கிய பெரும் சூறாவளி

கடந்த 21 வருடங்களில் தைவானை பெரும் பாதிப்புக்குள்ளாக்கிய மெரான்டி சூறாவளி, தற்போது சீனப் பெருநிலப் பரப்பில் கரைகடந்துள்ளது.

மணிக்கு 227 கிலோ மீட்டர் வரையிலான வேகம் கொண்ட இந்த அதி சூறாவளியால், தைவானில் ஒருவர் கொல்லப்பட்டார்.

மேலும், இந்த சூறாவளியால் 5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption சூறாவளியால் கடும் பாதிப்பு

சீனாவின் தென் கிழக்கு நகரமான ஷீயாமென் அருகே வியாழக்கிழமை (இன்று) சற்றே வலுவிழந்த நிலையில் இச்சூறாவளி கரையைக் கடந்தது.

இதனால், தெற்கு சீனாவில் பல டஜன் விமான சேவைகள் மற்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், பல ஆயிரம் மக்கள் அவர்களின் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தொடர்புடைய தலைப்புகள்